விஜய் - சங்கீதா விவாகரத்துக்கு இவங்க தான் காரணம்!! உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரைலரும் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

விஜய் - சங்கீதா
விஜய் தன் படங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தன மனைவி சங்கீதாவை கூட்டிச்செல்வது வழக்கம். ஆனால் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அவர் வராதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே தன் பெற்றோர்களை விஜய் கைவிட்டுவிட்டார் என்ற சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதற்கு மனைவி சங்கீதா தான் பின் புலத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதே சமயம் இடையில் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கடந்த ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் செய்திகள் கசிந்து வந்தது. அவரை விவாகரத்து செய்து நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளதாக இணையதள புகைப்படம் வைரலானது.

ஒரே காரணம் விஜய்யின் பெற்றோர்கள்
இந்நிலையில் சங்கீதா தன் அப்பாவின் வீட்டிற்கு வெளிநாட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஒரே காரணம் விஜய்யின் பெற்றோர்கள் எஸ் ஏசி மற்றும் ஷோபாவும் தான் காரணம் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார். விஜய்யின் பெற்றோர்கள் மீது சில கசப்பான மனநிலையில் சங்கீதா இருப்பதாகவும் மாமனார் மாமியார் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதை அறிந்ததால் தான் சங்கீதா வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விஜய்யின் ரசிகர்கள் அப்படியொன்றும் இல்லை என்று குடும்பத்தின் பிரச்சனைகளை பலர் பிடிக்காதவர்கள் கூறி வருவதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, காசு சம்பாதிக்கும் நோக்கில் நகரும் விஜய், தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடாமல் இருப்பதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.