முத்தக்காட்சியில் இத்தனை டேக்குகள்!! நெருக்கமான காட்சியில் இந்த உணர்வு தான் இருக்கும்.. நடிகை சஞ்சனா...
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையறை காட்சி மற்றும் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது கூச்ச சுபாவத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்று நினைத்து தீவிரமாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அதோடு அது போன்ற காட்சிகளில் ஒரே டேக்கில் நடிக்க நினைத்து பின் ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் என்று கூறியதும் கூச்ச உணர்வு வந்து கட்டுப்படுத்தமுடியாதாம். அப்படித்தான் சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனுக்கு லிப்லாக் காட்சியில் நடிக்கும் போது பல டேக்குகள் எடுத்தப்பின் தான் ஓகே செய்தார்கள் என்று சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார்.