இரண்டாம் முறை கர்ப்பம்! சாண்டி மாஸ்டரின் குழந்தையை கிண்டல் செய்த ரசிகர்! திட்டித்தீர்த்த மனைவி..

master sandy lala syilviya badyshaming
By Edward Sep 10, 2021 04:54 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி பிரபலமாகி வருபவர் சாண்டி மாஸ்டர். கலா மாஸ்டரிடம் உதய நடன இயக்குநராக பணியாற்றி பின் இந்த இடத்திற்கு வந்துள்ளார். காலா, மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்திலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கடைசி மூன்று இடத்தினை பிடித்தார். வீட்டிற்குள் இருக்கும் போதே அவரதுமனைவி மற்றும் மகள் லாலா வந்து நெகிழ வைத்த சம்பவம் ரசிகர்களை ஈர்த்தது. தற்போது சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் மகள் லாலா கணவருடன் சேர்ந்து போட்டோஷூட்டும் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், லாலா ஏன் குண்டாக இருக்கிறார்? ஒல்லியாக இருந்தால் தானே நடனமாட முடியும் என்று கிண்டல் செய்து மெசேஜ் செய்துள்ளார் ஒரு ரசிகர்.

அதற்கு சில்வியா, குழந்தையை பற்றி தவறாக விமர்சிப்பது முறையா! சமுதாயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. நமது எதிர்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை காண்பிப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருட்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery