என் அப்பா என்னால தான் இறந்துட்டாரு!! உருக்கமாக பேசிய ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. இரு ஆண்டுகளாக காத்திருந்த சங்கீதா கடந்த ஆண்டு சாதாரண முறையில் மைசூரில் ரெடின் கிங்ஸ்லியை மணந்தார். 46 வயதில் நடிகையை கரம்பிடித்த ரெடின் கிங்ஸ்லியை பலர் இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் வானொலிக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய தந்த இறந்தது குறித்து எமோஷ்னலாக பேசியிருக்கிறார். சின்ன சின்ன விசயத்திற்கு அழுதிருக்கிறேன், ஆனால் அப்பா மரணம் மிகப்பெரிய இழப்பாக இருந்தது. அப்பா திடீரென இறந்துவிட்டார். காலையில் என் கூட இருந்தார், இரவு நான் வரும் போது டெட் பாடியாக இருக்கிறார். யாருக்கும் இந்த நிலை வரவே கூடாது.
தவிர்க்க முடியாத ஒரு வேலையில் இருந்தேன், அப்பா முடியாமல் எனக்கு கால் செய்திருக்கிறார். நான் பண்ண பெரிய தப்பு, அந்த நேரத்தில் என்னிடம் பேச நினைத்திருக்கிறார், ஆனால் என்னால் கால் அட்டெண்ட் பண்ணவில்லை. அது எனக்கு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். அவர் இன்று இல்லாததை நினைத்து நான் வறுத்தப்பட்டுகிறேன். எனக்கு அது ஒரு தண்டனையாக எடுத்துக்கொண்டேன் என்றும் சங்கீதா பேசியிருக்கிறார்.
என் அம்மா, உன்னால் தான் அப்படி ஆச்சி என்று விளையாட்டாக கூறும் போது கூட எனக்கு வறுத்தமாக இருக்கும், அதனால் பெற்றோர்கள் எப்போது பேச நினைத்தாலும் அப்போதே பேசி விடுங்கள், அவர்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள் என்று பேசியிருக்கிறார்.
மேலும் பேசிய சங்கீதா, திருமணத்திற்கு பின் அவரை பற்றிய நெகட்டிங் மெசேஜ்கள் சமுகவலைத்தளத்தில் போடுகிறார்கள். நல்ல விசயத்தை பகிர்ந்தாலும், இதுபோல இல்லாத விசயத்தை கூறி மாற்றிவிடுகிறீர்கள். இருவரும் சரியாக புரிந்து கொண்டு வாழ்க்கையை சரியாக கொண்டு செல்கிறோம். ஒரு நல்ல நபர் எனக்கு கிடைத்திருக்கிறார். அதனால் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் அம்மா மற்றும் என் கணவரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.