மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய்!! வைரலாகும் மகன் சஞ்சய், மகள் ஷாஷாவின் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதற்கிடையில் விஜய் பற்றி தவறான கருத்துக்கள் இணையத்தில் கசிந்தும் வருகிறது. அரசியலில் நுழையவிருக்கும் விஜய் தன் குடும்பத்தினரை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருவதாகவும் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் விஜய், திரிஷாவுடன் ஜோடிப்போட்டு நடித்தது மனைவி சங்கீதாவிற்கும் அவரது மகன் சஞ்சய்-க்கும் பிடிக்கவில்லை என்று பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் விஜய் தன் மனைவி சங்கீதா, மகன், மகளுடன் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

