45 வயதில் இப்படியா!! மீனாவுடன் ஆட்டம் போட்ட விஜய்யின் முன்னாள் காதலி சங்கவி!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சங்கவி. நடிகர் அஜித் நடிப்பில் 1993 ல் வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய சங்கவி, விஜய்யின் ரசிகன் படத்திலும் நடித்தார்.

இரு முன்னணி நடிகர்களுடன் ஆரம்பகாலக்கட்டத்தில் அறிமுகமாகி நடித்த சங்கவி, விஜய்யுடன் விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, நிலாவே வா போன்ற படங்களில் நடித்த போது ருவருக்கும் இடையில் காதல் இருப்பதாகவும் அதை அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் கேட்டு மிரட்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகி பேசப்பட்டது.

ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விவரித்தார். அதன்பின் விஜய் பக்கமே செல்லவில்லை. அதன்பின் சங்கவி 2005 ல் ஏற்பட்ட விபத்து காரணமாக 2008க்கு பின் சினிமாவில் இருந்து விலகி உடல் நலனை பார்த்து வந்தார்.

அதன்பின் 2016ல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து சமீபத்தில் தான் சான்வி என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சமீபத்தில் நடிகை மீனாவுடன் ரீல்ஸ் வீடியோ செய்து அதை பகிர்ந்துள்ளார் சங்கவி. இதை பார்த்த ரசிகர்கள் இரு நடிகைகளையும் க்யூட் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.