விஜய், கீர்த்தி சுரேஷின் கல்யாணத்துக்கு வந்ததை தப்பா பேசினார்கள்!! சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ்..
விஜய்
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தளபதி 69 படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது தன்னுடைய கடைசி படத்தின் ஷூட்டிங்கிலும் இடையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் விஜய் மீது பல வதந்திகளும் பரவி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்றதையும் பலரும் பலவிதமாக விமர்சித்தனர்.
கீர்த்தி சுரேஷ் - ப்ரீத்தி சஞ்சீவ்
அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அவருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் என் தங்கைப்போல் என்னிடம் பழகுவார், என் கணவரிடம் அதிகமாக பேசமாட்டார்.அவர் காதலிப்பதாக அவரின் பிறந்தநாளன்று தான் கூறினார்.
பெற்றோர் சம்மதத்துக்காக இருவரும் காத்திருந்து தான் திருமணம் செய்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400 பேர் மட்டுமே கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு வந்தனர்.
விமர்சனம்
மஞ்சள் தாலி தெரியும்படி கீர்த்தி சுரேஷ் வந்ததை பலரும் விமர்சித்தார்கள், ஏன் நயன் தாரா அப்படி வந்தால் தவறில்லை, கீர்த்தி வந்தால் தவறா? என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு விஜய் வந்ததையும் விமர்சனம் செய்தார்கள்.
விஜய் வருவார் என்று யாருக்குமே தெரியாது. சர்ஃப்ரைசாகத்தான் அவர் வந்தார். காலையில் திருமணம் முடிந்ததும் உடனே சென்றுவிட்டார். ஆனால் தப்பாக பேசினார்கள். இந்த சோசியல் மீடியாவில் வரும் வதந்திகளை பார்த்தால் வாழவே முடியாது என்று ப்ரீத்தி சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.