AK 62 படத்திற்கு பிரபல நடிகர் போட்ட கண்டிஷன்..குழம்பி போன தயாரிப்பாளர்
இந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் 11 -ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
அதே தினத்தில் வெளியான வாரிசு படமும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக துணிவு மற்றும் வாரிசு அமைத்துள்ளது.
இதையடுத்து அஜித்தின் 62 -வது விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. AK 62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
AK 62
இதைதொடர்ந்து நடிகர் சந்தானம் இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது. சமீபகாலமாக ஹீரோ ட்ராக்கில் சென்று கொண்டு இருக்கும் சந்தானம் அஜித்தின் படம் என்பதால் காமெடியான நடிக்க சம்மதித்து 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். ஆனால் இப்படத்தில் நடிப்பதற்கு டபுள் மடங்கு சம்பளத்தை கேட்டுள்ளாராம் சந்தானம். இதனால் தயாரிப்பாளர் குழம்பியுள்ளாராம்.
இதன் பிறகு சந்தானம் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.