கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானி பதிலால் கடுப்பான சந்தானம்

Santhanam Devayani Tamil Cinema
By Bhavya May 15, 2025 05:30 AM GMT
Report

சந்தானம்

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்தவர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். 

அதன்பின் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் இவர் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வரும் மே 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானி பதிலால் கடுப்பான சந்தானம் | Santhanam Reply To Actress Statement

சமீபத்தில், பேட்டி ஒன்றில் தேவயானி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவரது கணவரை மோசமாக சந்தானம் கலாய்த்தது தனக்கு பிடிக்கவில்லை என்று பேசி இருப்பார்.

பதிலடி 

தற்போது, இதற்கு சந்தானம் பதில் அளித்துள்ளார். அதில், " அந்தப் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும்போதே, இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் தான் என்று தெரிவித்தோம்.

முதலில் நாங்கள் ஸ்க்ரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேயா என்று கேட்டுவிட்டுத்தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.  

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானி பதிலால் கடுப்பான சந்தானம் | Santhanam Reply To Actress Statement