பழிவாங்க போடப்பட்ட பிளான்!! மேடையிலேயே சந்தானம் கொடுத்த பதிலடி..
நடிகர் சந்தானம்
காமெடி நடிகராக நடித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்று வரும் நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் சுமார் ஹிட் கொடுத்தது. அவர் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், பள்ளியில் படிக்கும்போது நான் ரொம்பவும் அமர்க்களம் செய்வேன், கடைசி இருக்கை மாணவன் நான். ஒழுங்காக படிக்கமாட்டேன், எனவே என்னை பழிவாங்க, ஆண்டு விழாவில் பாடல் போட்டியில் என் பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்துவிட்டார்கள்.
நானோ முடியாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய குரல் நன்றாக இருக்காதுன்னு தெரிந்தும் அப்படி செய்தார்கள். விழாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் வந்தார்கள். நான் மேடைக்கு சென்று தேசிய கீதம் பாடினேன், எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

பாடல் முடிந்தவுடன் உட்கார சென்றார்கள். மீண்டும் பாடினேன், அவர்கள் எழுந்து நின்றார்கள். இப்படி மொத்தம் 3 முறை நடந்தது. வந்தவர்கள் எல்லோரும் டென்ஷனாகிவிட்டார்கள். ஆசிரியர்கள் என்னை நைஸாக மேடையில் இருந்து அழைத்து சென்றுவிட்டார்கள் என்று பகிர்ந்துள்ளார்.