பாடகி தீ, சந்தோஷ் நாராயணன் மகள் கிடையாதா? மனைவி லட்சுமி சொன்ன ரகசியம்..
சந்தோஷ் நாரயணன் மகள்
தென்னிந்திய சினிமாவில் இசைக்கு புதுவிதமான நிறத்தை கொடுத்த இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் நாராயணன். தன்னுடைய தனித்துவமான இசையை கொடுத்த சந்தோஷ் நாராயணின் மகள் தீ பாடகியாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.

பல படங்களுக்கு பாடிய தீ, சந்தோஷ் நாராயணனின் சொந்த மகள் கிடையாது என்ற உண்மை பலருக்கும் தெரியாத விஷயம். இதை சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி பகிர்ந்துள்ளார்.
மனைவி லட்சுமி
அதில், என்னுடைய மகள் தீ மற்றும் என் மகன் சுதீசன் இருவரும் என் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள். பின் என் வாழ்க்கையில் சந்தோஷ் நாராயணன் வந்தார். இந்த இரு குழந்தைகளை அவர் ஒரு நாளும் வேறுபடுத்தி பார்த்தது இல்லை.

தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஏற்றுக்கொண்டு வளர்த்தார். அதனால்தான் இன்று நாங்கள் ஒரு அழகான குடும்பமாக இருக்கிறோம். இசைதான் எங்களை ஒன்றாக இணைத்தது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.