அப்பா வயது நடிகரை அங்கிள்னு கூப்பிட்டு வாய்ப்பை இழந்த 26 வயது நடிகை..

Bollywood Salman Khan
By Edward Aug 09, 2022 12:30 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சைஃப் அலிகான். தன் மூத்த மகள் சாரா அலிகானை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்து வருகிறார். முன்னணி நடிகைக்கு இணையாக பேசப்பட்டு வரும் சாரா அலிகான் பல சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

அந்தவகையில் பாலிவுட் சினிமாவிற்காக கொடுக்கப்படும் IIFA விருது 2022 நிகழ்ச்சி கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஒளிப்பரப்பாகியது. அதன் ஒரு வீடியோவை கலர்ஸ் டிவி வெளியிட்டிருந்தது. அதில், மேடையில் பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானும் சாரா அலிகானும் உரையாடி வீடியோ தான் அது.

அப்பா வயது நடிகரை அங்கிள்னு கூப்பிட்டு வாய்ப்பை இழந்த 26 வயது நடிகை.. | Sara Ali Khan Calls Salman Khan Uncle Bai Reply

அதில் சாரா அலிகான் சில பிராண்டுகளை விளம்பரம் செய்ய உதவி செய்யுமாறு சல்மான் கானிடம் கேட்க, நான் சல்மான் அங்கிளுடன் சேர்ந்து சில பிராண்ட்களை அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன் என்று அரங்கில் இருப்பவர்களை நோக்கி கூறியுள்ளார்.

இதற்கு உடனே சல்மான் கான், அங்கிளா? உன் படம் போச்சு என்று கலாய்த்தார். ஏன் என்று கேட்ட சாரா, எனக்கு நீ ஜோடியாக நடித்திருக்கலாம் அங்கிள் என்று அனைவரின் முன்பே கூறியதால் வாய்ப்பு போய்விட்டது என்று காமெடியாக கூறியுள்ளார்.

பெரும்பாலும் சல்மான் கானின் நண்பர்களின் வாரிசுகளோ அல்லது பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்களோ அவரை பாய் என்று தான் அழைப்பார்கள். சைஃப் அலிகானின் மகள் சாரா அவரை அங்கிள் என்று கூப்பிட்டது பாலிவுட் சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.