விஜே சித்ராவின் கடைசி நிமிடங்கள்!! 2 வருடம் கழித்து வாய் திறந்த சீரியல் நடிகை சரண்யா..
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
சின்னத்திரை சீரியல் நடிகையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் விஜே சித்ரா. கடந்த 2020 டிசம்பர் 9 ஆம் தேதி காலை மர்மமான முறையில் ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு பின்னணியில் கணவர் ஹேமந்த் மற்றும் சிலர் இருப்பதாக கூறியிருந்தனர். இதுகுறித்து ஹேமந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் பேட்டிக்கொடுத்து வந்தனர். மேலும் சீரியல் நடிகை ரேகா நாயர் விஜே சித்ரா ரூமில் பல காண்டங்களை பார்த்தேன் என்றும் இன்னும் பல உண்மைகளை கூறியிருந்தார். இந்நிலையில் விஜே சித்ராவின் தோழியான சீரியல் நடிகை சரண்யா 2 வருடங்கள் கழித்து பேசியிருக்கிறார்.

சீரியல் நடிகை சரண்யா
இந்த விசயத்தில் இருந்து வெளியே வர எனக்கு 2 வருடங்கள் தேவைப்பட்டது என்றும் விஜே சித்ராவின் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியிருந்தார். அம்மாவுக்கு கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததால் மன அழுத்தத்தில் நான் இருக்கிறேன் என்று சித்ரா தன்னிடம் கால் செய்து பேசினார்.
இறக்கும் 9 ஆம் தேதிக்கு முன் என்னிடம் அவர் இருந்தார். பின் ஒருவர் கேமராவின் முன் அவசர அவசரமாக ஷூட்டிங் சமயத்தில் சித்ராவிடம் கையெழுத்து வாங்கியதாகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட சிரித்துக்கொண்டு தான் இருந்தார் என்று விவரித்தார்.
மேலும், விசாரணையின் போது ஆர்டிவோ-விடம் நானே பல கேள்விகளை கேட்டேன். இன்னும் கேஸ் போய்க்கொண்டு இருப்பதால் பல விசயங்கள் கூறக்கூடாது. வித்ராவின் டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டாங்க, ஒவ்வொரு ஆர்கன்ஸ் எல்லாம் ஃபாரன்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறது இன்று வரை என தெரிவித்துள்ளார்.
