மனோபாலாவை தொடர்ந்து ரஜினி, கமல் பட நடிகர் மரணம்!! அதிர்ச்சியில் சினிமாத்துறையினர்

Sarath Babu Tamil Actors
By Edward May 22, 2023 09:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நட்சத்திரங்களின் மரணம் அதிர்ச்சியை கொடுத்து வந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மயில்சாமி மற்றும் மனோபாலா மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இந்த துக்கம் துயரம் அடங்காத சமயத்தில் தற்போது, அண்ணமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத் பாபு அவர்கள் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது.

71 வயதான சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் காலமானார். சில வாரங்களுக்கு முன் அவர் உடல் நிலை மோசமான நிலையில் மரணமடைந்தார் என்று செய்தி வெளியாகி வைரலானது.

ஆனால் வெளியான செய்தி பொய் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சர்த்பாபு.

Gallery