மருமகனை ஒதுக்கி வைத்த சரத்குமார்.. கணவரை பாவத்துடன் பார்த்த வரலட்சுமி!!வீடியோ..
வரலட்சுமி தல பொங்கல்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை வரலட்சுமி, சரத்குமார் மகளாக போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி, கடந்த ஆண்டு நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணத்திற்கு பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் வரலட்சுமி - நிக்கோலாய்-க்கு முதல் தல பொங்கல். புதுமாப்பிள்ளைக்கு பெண்ணுக்கும் விருந்து பரிமாற்றத்தை சரத்குமார் குடும்பம் நடத்தினர்.
அதன்பின் குடும்பத்துடன் போட்டோ எடுக்கும் முறையில் நிக்கோலாயை ஓரமாக நிற்கவைத்து சூர்யவம்சம் பாணியில் கலாய்த்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
நிக்கோலாய் ரியாக்ஷன்
போட்டோகிராஃபர், சார் அவர் வரவில்லையா என்று கேட்க ஏங்க சின்ராசு என ராதிகா சொல்ல, என்ற குடும்பத்துல எல்லாம் வந்துட்டாங்க’ என்று சரத்குமார் கூற பாவமாக நிக்கோலாய் பார்த்துள்ளார். வரலட்சுமியும் தன் கணவர் ஓரமாக நிற்பதை பாவத்துடன் பார்த்து ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது.