சரிகமப சீசன் 5ல் இனியா பாடிய அந்த பாடல்.. கண்கலங்கிய தேவயானி, எமோஷ்னல் வீடியோ
சரிகமப
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் தான் டாப்பில் இருந்தது, தற்போது அந்த நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி சரிகமப நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த சரிகமப சீசன் 5விற்கு ரசிகர்கள் ஏராளம்.
கடைசியாக சிறுவர்களுக்கான சீசன் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் படு பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் தேர்வான போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செம பெர்பாமன்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
கண்கலங்கிய தேவயானி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. தற்போது இவருடைய மகள் இனியா சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
அவரின் குரலுக்கும் இப்போது ரசிகர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில், கடந்த வாரம் அவர் பாடிய பாடலுக்கு அவரது அம்மா கண்கலங்கி ரசித்து கேட்க, நடுவர்கள் அவரை பாராட்டி பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,