சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்!! இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா?

Sivakarthikeyan Zee Tamil Saregamapa Lil Champs Divinesh
By Edward May 17, 2025 08:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4

ஜீ தொலைக்காட்சியில் கடந்தவாரம் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சி. நேரு ஸ்டேடியத்தில் நடந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்து 6 இறுதிச்சுற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். அனைவரது மனதையும் கவர்ந்த திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்!! இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா? | Saregamapa Lil Champs 4 Winner Dhivinesh Stories

2வது இடத்தினை யோகஸ்ரீயும் 3வது இடத்தினை ஹேமித்ராவும் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள். இந்நிலையில் டைட்டில் வின்னராக தேர்வான திவினேஷின் பெற்றோர்களுன் குடும்பத்தினரும் பட்ட கஷ்டம் என்னென்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்!! இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா? | Saregamapa Lil Champs 4 Winner Dhivinesh Stories

திவினேஷ் குடும்ப சூழ்நிலை

திவினேஷின் அப்பா பால் வண்டி ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரின் அம்மா, வீட்டுப்பகுதியொ,க் இருப்பவர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலையை பார்த்துக்கொண்டே திருமண மண்டபத்தில் கேட்டரிங் சர்வீஸ் வேலையையும் பார்த்து வருகிறார். கேட்டரிங் வேலைக்கு செல்லும் திருமண வீடுகளில் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும்போது தன் மகனையும் பாட வைக்க வேண்டும் என்ற ஆசையில் அங்குள்ளவர்களிடம் கேட்டு அவமானப்பட்டுள்ளார்.

திவினேஷ் இப்படி அழகாக பாட காரணம் அவரது தாத்தா சொல்லிக்கொடுத்த பாடலை பாடியதுதான். டிவி கூட இல்லாத திவினேஷ் வீட்டில் ஆடிஷனில் தான் செலக்ட் ஆனதை கூட பார்க்கமுடியாத சூழலில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்று தான் பார்ப்பாராம். இதனை அறிந்து தான் சக போட்டியாளர்கள் திவினேஷுக்கு டிவி வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்!! இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா? | Saregamapa Lil Champs 4 Winner Dhivinesh Stories

அப்பாவுக்கு வேலை

சரிகமப நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து வருவதால் என் அப்பாவுக்கு வேலை போய்விட்டது, அவருக்கு ஒரு வண்டி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையை திவினேஷ் கூறியிருக்கிறார். இதனால் ஷாக்கான பாடகர் ஸ்ரீநிவாஸ், திவினேஷ் அப்பாவுக்கு டாடா ஏசி காரை வாங்கியும் கொடுத்துள்ளார்.

திவினேஷ் அம்மா பேசுகையில், ஆரம்பத்தில் எங்களை என் சொந்த உறவினர்களே மதிக்கமாட்டார்கள், அசிங்கப்படுத்துவார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றாலும் கூட கண்டுக் கொள்ளாததுபோல் முகத்தை திருப்பிக் கொள்வார்கள்.

ஆனால் இன்று என் மகன் பாடிய பின் எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஒரு மேடையில் பாடுவதற்கு என் மகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நான் கேட்டுக்கொண்டிருந்தபோது என் மகனை எல்லோரும் அவர்களுடைய நிகழ்ச்சியில் பாடுவதற்கு கூப்பிடுகிறார்கள். இந்த சந்தோஷம் எங்களுக்கு பெருசாக இருக்கிறது என்று உருக்கமாக கூறினார்.

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ் பட்ட கஷ்டம்!! இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சோகமா? | Saregamapa Lil Champs 4 Winner Dhivinesh Stories

திவினேஷிக்கு கிடைத்த பரிசு

இப்படி ஒரு கஷ்டங்களை வெளியில் காட்டிக்கொள்ள முடியாத திவினேஷ், டைட்டில் ஜெயித்ததோடு, 10 லட்சம் பரிசு தொகையும், மெல்லிசை இளவரசன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். திவினேஷுக்கு வசந்த் அண்ட் கோ சார்பில் டிவி வழங்கப்பட்டது.

அதேபோல் பாடகரும் இசையமைப்பாளரும் மெல்லிசை நாயகன் எம் எஸ் சியின் பாடல்கள் ரவுண்ட்டின் போது எம் எஸ் வியின் குடும்பத்தினர், திவினேஷை எங்கள் குடும்ப வாரிசு-ஆக அறிவித்தனர்.

இசையமைப்பாளர் தேவா ரவுண்ட்டின் போது ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம் என்ற பாடலை திவினேஷ் பாடியிருந்தார். அப்போது தேவா கண்கலங்கியபடி, என்னை டே என்று கூப்பிடும் ஒரே ஆள் என் அம்மாதான். திவினேஷ் பாடியபோது என் அம்மா ஞாபகம் எனக்கு வருகிறது என்று எமோஷ்னலானார்.

அதேபோல் விஜயகாந்த் பாடல்கள் ரவுண்ட்டின் போது திவினேஷ் பாடியதை கேட்ட விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்னொரு முறை இந்த பாடலை பாடுங்கள் என்று சொல்லி கேட்டுள்ளார். சிவகார்த்திகேயனும் திவினேஷின் பாடலை கேட்டு மெய்சிலிர்த்தபடி ரசித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.