சரிகமப லிட்டில் சாப்ஸ் 4!! நடுவர்களை வியக்க வைத்த பர்ஸ்ட் ஃபைனலிஸ்ட் ஹேமித்ரா..
சரிகமப லிட்டில் சாப்ஸ் 4
ஜீ தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி தான். தற்போது Saregamapa Lil Champs Season 4 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே போட்டி ஆரம்பமாகி ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ போன்ற மூவரும் தேர்வாகியுள்ளனர். 4 மற்றும் 5வது இடத்தினை பிடிக்க போட்டியாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். கடந்த வாரம், போட்டியாளர் திவினேஷ் சிறப்பாக பாடி நடுவர்களையும் ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தார்.
சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 4வது இறுதி சுற்றுப்போட்டியாளராக நிவினேஷ் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாரம் போட்டியாளர்கள் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.
ஹேமித்ரா
அதில் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த ஹேமித்ரா நடுவர்களையே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பாடி அசத்தியிருக்கிறார். அவர் பாடிய பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.