சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! திறமைக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா..

Sivakarthikeyan Deva Zee Tamil Saregamapa Lil Champs
By Edward May 13, 2025 01:30 PM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகினர்.

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! திறமைக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா.. | Saregamapa Little Champs 4 Yogashree Wins Hearts

மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார். மேலும் இரண்டாம் இடம் யோகஸ்ரீயும், 3வது இடம் ஹேமித்ராவும் பிடித்தனர்.

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! திறமைக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா.. | Saregamapa Little Champs 4 Yogashree Wins Hearts

யோகஸ்ரீக்கு கிடைத்த பரிசுகள்

இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த யோகஸ்ரீ, அடிப்படை வசதி இல்லாத வீட்டில் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படிப்பட்ட யோகஸ்ரீக்கு சரிகமப நிகழ்ச்சி சார்பில் 1700 சதுரடியில் இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளாது. அதில் யோகஸ்ரீ வீடு கட்டிக்கொள்ளலாம். இது எல்லாம் யோகஸ்ரீயின் திறமைக்கு கிடைத்த ஒன்று.

அதேபோல் ஃபைனல் நிகழ்ச்சியில் வந்த சிவகார்த்திகேயன் நான் நடிக்கப்போகும் படத்தின் இசையமைப்பாளர்களிடம் உன் பெயரை தான் ரெபர் செய்வேன், நீ கண்டிப்பாக என் படங்களுக்கு பாடல்கள் பாட வேண்டும் என்றும் அதற்காக இசையமைப்பாளர்களிடம் பேசப்போகிறேன் என்றும் கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! திறமைக்கு கிடைத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா.. | Saregamapa Little Champs 4 Yogashree Wins Hearts

பாடகர் ஸ்ரீனிவாஸிடன் சார் நீங்க ஏ ஆர் ரகுமானிடம் யோகஸ்ரீ பற்றி பேசுங்க என்றும் சிவகார்த்திகேயன் சொல்லியுள்ளார். இசையமைப்பாளர் தேவா ரவுண்ட் பாடல் பாடப்பட்டபோது யோகஸ்ரீ பாடலை கேட்டு தேவா அவர்களே கண்கலங்கினார்.

அதோடு, யோகஸ்ரீக்கு பாட வாய்ப்பும் கொடுத்துள்ளார். யோகஸ்ரீக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் அவர் வாழ்க்கைக்கான ஒரு அங்கீகாரத்தை சரிகமப நிகழ்ச்சி கொடுத்துள்ளது. யோகஸ்ரீயின் ஆசையும் பூர்த்தி செய்திருக்கிறார்கள் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சி குழுவினர்.