மகளுக்காக துபாயில் இருந்து வந்த அம்மா!! எமோஷனலான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தன்வி..வீடியோ..

Viral Video Zee Tamil Tamil Singers Saregamapa Lil Champs
By Edward Mar 02, 2026 07:30 AM GMT
Report

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தன்வி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 5 கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மகளுக்காக துபாயில் இருந்து வந்த அம்மா!! எமோஷனலான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தன்வி..வீடியோ.. | Saregamapa Sangamam Thanvi Emotional For Mother

பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு வரும் லிட்டில் சாம்ப்ஸ் 5ல் ஊட்டியை சேர்ந்த தன்வி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் பாடி தன்வியிடம், தாத்தா, பாட்டி மட்டும் வந்திருக்கிறார்கள். பெற்றோர் எங்கே என்று ஸ்வேதா கேட்டுள்ளார்.

அதற்கு தன்வி, அம்மா சிங்கிள் பேரண்ட், அம்மா துபாயில் வேலை பார்க்கிறார்கள், அதனால் அவர்களால் வரமுடியவில்லை என்று கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து பேசிய தன்வியின் பாட்டி, கருத்து வேறுபாட்டால் அம்மா, அப்பா இருவரும் பிரிந்துவிட்டார்கள், துபாயில் வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார்கள்.

மகளுக்காக துபாயில் இருந்து வந்த அம்மா!! எமோஷனலான சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் தன்வி..வீடியோ.. | Saregamapa Sangamam Thanvi Emotional For Mother

துபாயில் இருந்து வந்த அம்மா

இந்நிலையில் கடந்த வாரம் சரிகமப சங்கமம் நடைபெற்றது. அப்போது தன்வியின் அம்மா, துபாயில் இருந்து சர்ப்ரைஸாக வந்துள்ளார். அம்மாவை பார்த்து கண்ணீர்விட்டு அழுதுள்ளதை பார்த்த அரங்கமே எமோஷனலாகிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.