சரிகமப சீனியர் 5!! டைட்டில் வின்னருக்கு மீண்டும் வாய்ப்பா!! விஜய் பிரகாஷால் கடுப்பான ரசிகர்கள்...
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 4.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது.
அதில், ஸ்ரீவாணி என்ற போட்டியாளர், தமிழ் பாடலை பாடுவதற்கு முன் கன்னட மொழி பாடல் ஒன்றினை பாடியிருக்கிறார். முதலில் வைட்டிங் லிஸ்ட்டில் வைக்கிறோம் என்று விஜய் பிரகாஷ் பிராங்க் செய்துள்ளார். அந்த பெண்ணை இதற்கு முன் தெரியாதது போல் நடித்த விஜய் பிரகாஷை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அதற்கு காரணம் ஸ்ரீவாணி ஏற்கனவே ஜீ கன்னட சேனலில் ஒளிப்பரப்பான சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடி, ஃபைனல் வரை சென்றவர். அந்நிகழ்ச்சியில் விஜய் பிரகாஷும் நடுவராக இருந்து ஸ்ரீவாணியை பாராட்டவும் செய்தவர்.
அப்படி நடித்த விஜய் பிரகாஷுக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்றும் அனைத்தும் ஸ்கிரிப்ட் தான் என்றும் உண்மையான திறமையாளர்கள் வெளியில் வரவே முடியாதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.