சரிகமப சீனியர் 5!! நடுவர்களை உருக வைத்த சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான்..
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளனர். இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 24 ஆம் தேதி ஒளிப்பரப்பாகவுள்ளது.
சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான்
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டி ராஜேந்தர் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
முதன்முதலாக நிகழ்ச்சியில் பாடியபோது நடுவர்களை உருகவைத்து கோல்டன் பசரையும் வாங்கியிருக்கிறார் பிரஷான்.