ஆரம்பம் ஆகும் சரிகமப சீசன் 5.. வெளிவந்தது முதல் ப்ரோமோ வீடியோ

Saregamapa Lil Champs
By Kathick May 15, 2025 04:30 AM GMT
Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனதை வென்ற நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

ஆரம்பம் ஆகும் சரிகமப சீசன் 5.. வெளிவந்தது முதல் ப்ரோமோ வீடியோ | Saregamapa Seniors Season 5 Promo Video

சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இரண்டாம் இடம் யோகஸ்ரீயும், 3வது இடம் ஹேமித்ராவும் பிடித்தனர்.

ஆரம்பம் ஆகும் சரிகமப சீசன் 5.. வெளிவந்தது முதல் ப்ரோமோ வீடியோ | Saregamapa Seniors Season 5 Promo Video

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 முடிவு வந்த நிலையில், அடுத்ததாக சீனியர் சீசன் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அப்படி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், சரிகமப சீனியர் சீசன் 5ன் ப்ரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.

இதோ பாருங்க..