சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! நிறைவேறிய டைட்டில் வின்னர் திவினேஷின் நீண்ட நாள் கனவு
திவினேஷ்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கும் நிறைய வரவேற்பு உள்ளது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4.
ஜீ தொலைக்காட்சியில் கடந்தவாரம் சிறப்பான முறையில் நிறைவு பெற்ற இந்த சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியில், அனைவரது மனதையும் கவர்ந்து திவினேஷ் டைட்டில் வின்னராக வந்தார்.
அவரை தொடர்ந்து, 2வது இடத்தினை யோகஸ்ரீயும் 3வது இடத்தினை ஹேமித்ராவும் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள்.
மேலும், நேரு ஸ்டேடியத்தில் நடந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.
நிறைவேறிய கனவு
இந்நிலையில், நிகழ்ச்சியில் தனது அப்பாவுக்கு சொந்தமாக பால் வேன் வாங்க வேண்டும் என்பது திவினேஷ் கனவாக இருந்த நிலையில், தற்போது, அந்த கனவு நிறைவு பெற்றுள்ளது.
இது தொடர்பாக பாடகர் ஸ்ரீனிவாசன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வேன் உடன் திவினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.