10 வருஷம் காணாமல் போய் வெளிநாட்டில் செட்டிலானது ஏன்!! உண்மையை கூறிய நடிகை சரிதா..

Sivakarthikeyan Saritha Maaveeran Tamil Actress Actress
By Edward Jul 08, 2023 10:00 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிதா. தப்புத்தாளங்கள் என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகை சரிதா 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பல விருதுகளை கைப்பற்றி புகழ்பெற்ற சரிதா, 1975ல் சுப்பையா என்பவரை திருமணம் செய்து ஒரேவொரு ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

10 வருஷம் காணாமல் போய் வெளிநாட்டில் செட்டிலானது ஏன்!! உண்மையை கூறிய நடிகை சரிதா.. | Saritha Open Her Break After 10 Year Why Maaveeran

அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து 1988ல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றார். அவருடன் 23 ஆண்டுகள் வாழ்ந்தப்பின் கருத்து வேறுபாடு அவருடனும் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். சினிமாவில் இருந்து விலகிய பல ஆண்டுகள் கழித்து 2011 அவரை விவாகரத்து செய்து வெளிநாட்டில் மகன்களுடன் செட்டிலாகினார்.

தற்போது 10 ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சரிதா. வரும் 14 ஆம் தேதி மாவீரன் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.

10 வருஷம் காணாமல் போய் வெளிநாட்டில் செட்டிலானது ஏன்!! உண்மையை கூறிய நடிகை சரிதா.. | Saritha Open Her Break After 10 Year Why Maaveeran

ஒரு பேட்டியொன்றில் ஏன் இவ்வளவு வருஷம் பிரேக் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். பிரேக்கிற்கு காரணம் 24/7 மதர் தான். அம்மா டியூட்டி, எல்லோரும் அந்த நிலையை தாண்டனும் தானே, அதற்கு தான். சினிமா எனக்கு வாழ்க்கை கொடுத்தது. தாயாக இருக்க சில முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. அது என்னுடைய முடிவு தான். நான் மிஸ் பண்ணியது குட் மூவிஸ்.

சில படங்களை நானே வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன். மடோன் அஸ்வின் கதை கூறும் போது எனக்கு பிடித்திருந்தது. நோன்னு சொல்ல எந்த காரணமும் இல்லை, சிவகார்த்திகேயனும் ஒரு காரணம். படம் ஆரம்பித்த போது எனக்கு கோவிட் வந்தது. எனக்கு பயம் வந்ததால் வேண்டாம்ன்னு அஸ்வினிடம் சொல்லிட்டேன்.

10 வருஷம் காணாமல் போய் வெளிநாட்டில் செட்டிலானது ஏன்!! உண்மையை கூறிய நடிகை சரிதா.. | Saritha Open Her Break After 10 Year Why Maaveeran

ஆனால் வேறு ஆப்ஷனே இல்லைன்னு அஸ்வின் சொன்னார். அதன்பின் சிவா தான் அவங்க தான் வேண்டும் என்று இருந்ததால் எனக்கு நம்பிக்கை வந்து நடித்தேன் என்று சரிதா கூறியுள்ளார்.