ஏன்னா நீங்க தான டெலிவரி பாய், பிரபல நடிகரை கலாய்த்த நடிகை
தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான பின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் நடிகைகள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானார் பிரியா. இதையடுத்து மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.
எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து பேசப்பட்ட பிரியா தற்போது கையில் பல படங்களை வைத்து நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி, சமீபத்தில் கேக் வைத்தப்படி லவ் லுக் லைக் ஃபுட் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு நடிகர் சதீஷ், அதுக்கு தான் என் பேர ஃபுட்னு சேவ் பண்ணி வச்சிருக்கியா என்று காமெடியாக கொள்ளுவிட்டு மெசேஜ் செய்துள்ளார்.
அது உங்க வீட்ல இருந்து சாப்பாடு வரதால ஃபுட் நீங்க இல்லை உங்க மனைவியும் அக்காவும். நீங்க டெலிவரி பாய் என்று கலாய்த்து பதிலளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
Ohhhh adhukku dhan en pera food nu save panni vechirukkiya ??
— Sathish (@actorsathish) August 19, 2021