மணிவண்ணனால் தான் சத்யராஜிற்கு இந்த இடம் கிடைச்சதா? பிரபல நடிகர் ஓப்பன் டாக்

manivannan bayilvan ranganathan sathyaraj pvasu
By Edward Aug 07, 2021 02:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று 80களில் ஆரம்பித்து தற்போது வரை பிஸி நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பகால கட்டத்தில் முன்னணி இயக்குநர்கள் படத்தில் ஆரம்பித்து தற்போது பாகுபலி கட்டப்பாவாக பேர் பெற்றவர்.

சமீபத்தில் சத்யராஜ் பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சத்யராஜ் பெயர் வெளியே தெரியவும் ஹிட் கொடுக்கவும் காரணமாக இருந்தவர் மணிவண்ணன். கரும்பு வில் படத்தில் நடிக்க ஆரம்பித்த சத்யராஜ் மணிவண்ணனுடன் 25 படங்கள் நடித்தும், மணிவண்ணன் இயக்கிய 17 படத்தில் சத்யராஜ் நடித்துமுள்ளார்.

புரட்சி கதைகளை இயக்குவதில் கலைஞருக்கு அடுத்து மணிவண்ணன் தான் என்றும் கூறியுள்ளார். பி வாசு இயக்கத்தில் வால்டர் வெற்றிவேல் படம் தான் சத்யராஜின் படத்தின் வாழ்க்கையை மாற்றியது.

வீடியோ பார்க்க க்ளிக் செய்க..