சோறு போடுங்க..! தலையில தூக்கிவச்சி கொண்டாடாதீங்க! சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக தாக்கிபேசிய நடிகர்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகர் சத்யரா. பாகுபலி படத்தில் கட்டப்பாவாகவும் ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் அப்பா ரோலிலும் நடித்து கவனத்தை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் இலவச தற்கொலை தடுப்பு சேவை மையம் துவக்க விழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளரிடம் பேசியிருந்தார் நடிகர் சத்யராஜ். அப்போது, நீங்கள் ஒரு நடிகருக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்காதீர்கள்.
ஈரோடில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது நடிகர் சத்யராஜ் வரவேற்கத்தக்க கருத்துகளை கூறியிருக்கிறார். எந்த விடயமாக இருந்தாலும் நடிக, நடிகயர்களை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்ற அணுகுமுறையை தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.சம்பந்தப்பட்ட துறைசார் 1/3 https://t.co/BcEMDHrmc8
— Ramakrishnan T (@Rama_Krishnan) September 11, 2022
நடிக்க மட்டுமே தெரியும் என்றும் ஏன் எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறீங்க. நாங்க சும்மா நடிப்போம், ஸ்டார் கேமரா ஆக்ஷன்னு சொன்னா நடிப்போம். சோறு போடுங்க, தலையில் தூக்கி கொண்டாடாதீங்க.
நாங்க யாரும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்காரோ கிடையாது. சைக்காஸ்டிஸ் பற்றி என் கிட்ட கேட்டா என்ன தெரியும் எனக்கு என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஆனால் இதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக பேசியுள்ளார் என்று சமுகவலைத்தளத்தில் சத்யராஜை விளாசியும் வருகிறார்கள். ஏற்கனவே ஒரு நிகழ்வில் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசியது வைரலானது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் நடிகர் சத்யராஜ் ஆனால் நடந்தது வேறு?????????? pic.twitter.com/NIR3bRFIm8
— Gokul Thangam Rajinikanth (@GokulsaranPT) September 12, 2022