சூப்பர் ஸ்டார் என்றால் அவர் மட்டும் தான்!..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து சத்யராஜ்

Ajith Kumar Rajinikanth Sathyaraj Vijay
By Dhiviyarajan Aug 20, 2023 11:34 AM GMT
Report

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார்..

ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர்.

ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்..

உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனது பேச்சை நிறைவு செய்தார் சத்யராஜ்.