மூன்றாவது கணவருடன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகை Scarlett Johansson..
உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கக்கூடிய நட்சத்திரங்களில் ஒருவர் ஹாலிவுட் நடிகை Scarlett Johansson. ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான இவர், Lucy, captain america, Avengers படங்கள் மூலம் இந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் Black widow எனும் திரைப்படம் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து வருகிறது.
இவர் நடிகர் ரயன் ரேனால்ட்ஸை 2008-ல் திருமணம் செய்து 2011-ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு, ரொமைன் டவுரியாக் என்ற தொழில் அதிபரை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் 2017-ல் விவாகரத்து பெற்றுக்கொடு இருவரும் பிரிந்துவிட்டார்கள். பின்னர் நகைச்சுவை நடிகரான காலின் ஜோஸ்டைக்கை காதலித்து 2020-ல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் Scarlett Johansson.
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை Scarlett Johansson-னுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது குழந்தைக்கு காஸ்மோ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் Scarlett Johansson-னுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.