ஸ்கூல்-க்கு வர மாதிரியா வறீங்க சலூன் வேலை பார்த்த தலைமை ஆசிரியர்!

Samuthirakani Viral Video
By Edward Jun 24, 2022 05:30 PM GMT
Report

தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் சூழ்நிலையில் விழுப்பிரம் மாவட்டம் வானூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ மாணவியர்களை புது வகையில் வரவேற்றுள்ளார்.

கையில் கத்தரிக்கோல் சீப்புடன் பள்ளி கேட் வாசலில் நின்றபடி முடியை சரியாக வெட்டாமலும் ஒழுக்கமாக வராத பிள்ளைகளுக்கு சரியாக ஆடையை முடியை சரி செய்து கொள்ளுமாறு கேட்டு வந்தார்.

முடியை வளர்த்து ஒழுங்காக வராத மாணவர்களுக்கு அவரே முடியை வெட்டி வரவேற்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாகி முறையாக பள்ளிக்கு வருவதில்லை, ஆசிரியர்களுக்கு கட்டுப்படுவதில்லை, பெற்றோரிடம் வரம்புமீறி செயல்படுகிறார் என்ற புகார்கள் வந்த நிலையில் தலைமை ஆசிரியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டையும் பெற்று வருகிறது.