அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? வெளியான சீக்ரெட்ஸ்..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani
By Edward Sep 17, 2024 06:31 AM GMT
Edward

Edward

Report

முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் சமீபத்தில் மிகப்பெரியளவில் பல ஆயிரம் கோடி செலவில் நடைபெற்றது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இத்திருமணத்திற்கு உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? வெளியான சீக்ரெட்ஸ்.. | Secret Of Mukesh Ambani Family S Success

பல கோடிகள் மதிப்பிலான அணிகலன்களை முகேஷ் அம்பானி வீட்டுப்பெண்கள் அணிந்திருந்தனர். அதிலும் மணமகள் ராதிகா திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற சீக்ரெட்ஸ் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வெற்றிக்கு என்ன காரணம்

முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீடா அம்பானியும் பலருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள். அவர்களின் தொலைநோக்கு தலைமை, தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் பரோபகாரப்பணிகள் உள்ளிட்டவை அவர்களிடன் நீடித்து இருக்கிறது. தன் பிள்ளைகள் ஆகாஷ், ஆனந்த், இஷா ஆகியோரை அடக்கமான முறையில் வளர்த்து, கடின உழைப்பு மற்றும் எளிமையான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுத்துள்னர்.

கல்வி, கலாச்சாரம், சமூகப்பணிகள் மற்றும் பெண்களின் அதிகாரம் உள்ளிட்டவற்றை நீடா அம்பானியின் பங்களிப்பு பலருக்கு உதவேகமாக இருக்கிறது.

அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? வெளியான சீக்ரெட்ஸ்.. | Secret Of Mukesh Ambani Family S Success

அப்படி அம்பானி குடும்பத்தின் வெற்றி மந்திரமும் தொழில் வளர்ச்சி பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு அம்பானிகள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை அவர்களே உலகத்திற்கு வெளிப்படுத்துகிறார்கள்.

உத்திகள், மதிப்புகள், தொலைநோக்கு மற்றும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாடுகள் போன்றவற்றை அம்பானி க்டூம்பம் வேரூன்றி இருந்து சக்திவாய்ந்த வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர். அப்படி அவர்களிடம் கற்றுக்கொள்ளும் விஷயமாக சில முக்கியமான பாடங்கள் இருக்கிறது.

உடல் தகுதி

யோகா பயிற்சி, நடைபயிற்சி மற்றும் நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அம்பானி குடும்பத்தினர் முன்னுரிமை அளித்து உடல் தகுதியை பராமரித்து வருகிறார்கள். பிஸியான வேலைகளில் கூட உடற்பயிற்சியை ஒருபோதும் கைவிடாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? வெளியான சீக்ரெட்ஸ்.. | Secret Of Mukesh Ambani Family S Success

சரியான தூக்கம்

மனிதனுக்கு தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். உடல் ஆரோக்கியம், மனக் கூர்மை மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றை பெற தரமான தூக்கம் அவசியம் என்று அம்பானி குடும்பத்தினர் புரிந்து கொண்டு அதை செய்து வருகிறார்கள்.

குடும்ப நேரம்

பிசியான வாழ்க்கை முறையில் நாம் குடும்பத்தினரிடம் நேரத்தை செலவிடுவதில்லை. ஆனால் அம்பானி குடும்பத்தினர், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், மனநலனையும் வளர்க்கும் குடும்பமாக திகழ்கிறார்கள்.

மருமகள் கையைப்பிடித்த முகேஷ் அம்பானி!! வாக்குவாதம் செய்த மகன் ஆனந்த் அம்பானி..

மருமகள் கையைப்பிடித்த முகேஷ் அம்பானி!! வாக்குவாதம் செய்த மகன் ஆனந்த் அம்பானி..

தொடர்ச்சியான கற்றல்

அம்பானி குடும்பத்தினரும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்தில் தயாராக இருந்து மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களின் அறிவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பங்களிப்பை இதனால் மாற்றியமைத்து வருகிறார்கள்.

மன அழுத்தம் பராமரிப்பு

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் கவனத்தை மேம்படுத்தவும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தவும் தியானம் செய்ய நேரத்தை ஒதுக்குகிறார்கள். மன உளைச்சலை தவிர்த்து ஆரோக்கியமான மனநிலையை பராமரித்தும் வருகிறார்கள்.