அப்போ அழுததெல்லாம் பொய்யா? இளையராஜா புராணம் பாடும் இயக்குனர் சீனு ராமசாமி..

Ilayaraaja Yuvan Shankar Raja
1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவகாற்று, தர்மதுறை போன்ற படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி கூட்டணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் மாமனிதன். படம் 5 வருடங்களுக்கு பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜூன் 24 ஆம் தேதி நாளை வெளியாகவுள்ளது.

அவமானப்படுத்திய இளையராஜா

இளையராஜா ஏற்கனவே போட்ட இசையை யுவன் சங்கராஜா ரிரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது சீனு ராமசாமி அழுது பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரீரெக்கார்ட்டிங் செய்யும் போது என்னை உள்ளே அனுமதிக்காமல் ஒதுக்கி வந்தார் இளையராஜா.

நான் என்ன செய்தேன், படத்தின் இயக்குனரை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறி புலம்பினார். மேலும் பாடலை எழுதிய பா விஜய் கூட கள்ளக்காதலியிடம் பேசுவது போல் ரீரெக்கார்டிங் செய்யும் போது தயங்கி தயங்கி பேசினார் என்றும் கூறியிருந்தார்.

இப்படியெல்லாம் பேசிவிட்டு தற்போது இளையராஜா புரணாம் பாடி ஒரு பதிவினை போட்டுள்ளார் சீனு ராமசாமி.

இளையராஜா புராணம்

இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதை பயன்படுத்தி சிலர் அவரை சிறுமை செய்யத் துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது.

அவரது புகழ் பாடும், அவர்மீதான என் அன்மை பேசும் என்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ அழுதுட்டி இப்ப ஏன் மாற்றி பேசுகிறீர்கள். எதாவது இளையராஜா தரப்பினர் பேசி கேட்டார்களா என்று கேள்வியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சீனு ராமசாமி இளையராஜாவையும் வைரமுத்துவையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியது தான் இளையராஜாவுக்கு அவர்மீது கோபத்தை ஏற்படுத்தி ஒதுக்க காரணமாக அமைந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.