காதலுக்காக மொட்டை! இரு திருமணமே விவாகரத்தில் முடிந்து 3 குழந்தைக்கு தாயான நடிகையில் நிலை..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. 1985ல் ஆண் பாவம் படத்தின் மூலம் அறிமுகமாகி இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
1989ல் வெளியான புதிய பாதை படத்தில் பார்த்திபன் இயக்கிய படத்தில் அவருக்கே ஜோடியாக நடித்தார். இதையடுத்து முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் வளர்ந்து, ஒரே வருடத்தில் இருவரும் திருமணம் செய்தனர். 11 ஆண்டுகள் வாழ்க்கை சுமுகமாக சென்றது. பின் 2001ல் இருவருக்கும் மூன்று குழந்தைகளோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, சீதா சதிஷ் என்பவரை திருமணம் செய்து 6 ஆண்டுகள் வாழ்ந்த பின் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர்.
தற்போது மூன்று குழ்ந்தைகளுடன் சீதா தனிமையில், பார்த்திபன் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சீதா பார்த்திபன் காதல் பற்றி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்த்திபனை காதலித்த போது நடிகை சீதா மொட்டை அடித்ததாகவும் என்ன காரணம் என்றும் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார். ஒரு படத்தின் போது பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்ததாம். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லையாம்.
அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டு விட்டாராம் சீதா.
இதுபற்றி பார்த்திபனிடன் பாக்யராஜ் கேட்டபோது அந்த விவரத்தை கூறியுள்ளாராம்.