ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலி! இன்னும் மறக்காமல் இருக்காங்களே..

television arya sayyesha engaveettumappillai seethalakshmi
By Edward Sep 08, 2021 09:45 AM GMT
Report

முன்னணி நடிகராக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடித்து பெரிய வெற்றியை சில படங்களில் கொடுத்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமான ஆர்யா சமீபத்தில் நடித்த சார்ப்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றியை ஓடிடி தளத்தில் பெற்றது. படத்தின் வெற்றியாக சமீபத்தில் அவரது மனைவி ஆண் குழந்தையை பெற்றுள்ளார் என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் பல பணமோசடி பிரச்சனைகளை சந்தித்த ஆர்யா இதை ஒன்றும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறார். திருமணத்திற்கு முன் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி பெண் தேடினார். அதில் சில பெண்கள் ஆர்யா மீது தீராத காதலில் இருந்தனர். அப்படியாக இருந்து வந்தவர் சீதா லட்சுமி. மலையாள பெண்ணாக இருந்து மாடலிங்துறையை பயின்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் சாயிஷாவை திருமணம் செய்தார். இந்நிலையில் சீதா லட்சுமி ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் க்ளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தும் வருகிறார்.

ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலி! இன்னும் மறக்காமல் இருக்காங்களே.. | Seethalakshmi Post With Arya Romance Video