கணவருடன் சேர்ந்த ஒரே வருடத்தில் அதிர்ஷ்டம்! பிக்பாஸ் 5ல் பிரபல சீரியல் நடிகை..

biggboss television kamalhaasan biggbosstamil5 serialactress
By Edward Sep 10, 2021 07:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ஒளிப்பரப்பாக்கி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக நடத்தி வரும் இந்நிகழ்ச்சியின் 5 வது சீசன் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் 5ன் பிரமோ வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்ற செய்தி நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

நடிகை ஷகிலாவின் மகள் மிளா, சார்பாட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப், சீரியல் நடிகை பவானி ரெட்டி, நடிகை பிரதைனி சர்வா, மாடல் மற்றும் நடிகர் கோபிநாத் ரவி, நடிகை சூசன் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வதாக கூற்ப்பட்டு வருகிறது. பல பெயர்கள் இடம்பிடித்தாலும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சி போகவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

ரஜினியின் வள்ளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரியா ராமன் ஒருசில படங்களில் நடித்து நடிகர் ரஞ்சித்தை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.

இருவரும் தற்போது செந்தூரப்பூவே சீரியலில் நடித்தும் வருகிறார்கள். இந்நிலையில் கணவருடன் சேர்ந்த சில மாதங்களில் பிக்பாஸ் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.