நான் அப்படிபட்ட பொண்ணா! சீரியல் நடிகையை மிரட்டி கொடுமைபடுத்தி வரும் இயக்குநர்!

serial divorce jennifer sembaruthy
By Edward Apr 26, 2021 09:00 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான சீரியல் செம்பருத்தி. டிஆர்பியில் கொடிக்கட்டி பறந்த இந்த சீரியல் தற்போது சுமாராகத்தான் சென்று கொண்டிருக்கிறந்து.

இந்நிலையில் இந்த சீரியலில் சிறுகதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிஃபர். சரவணன் என்பவரை முதல் திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விபாகரத்தை நாடியிருந்தனர். இதையடுத்து, சீரியல் நடிகை ஜெனிஃபர் உதவி இயக்குநரான நவீன் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை எடுத்து தற்போது என்னை கொடுமைபடுத்தி வருவதாக பேட்டியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும் அரை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு விடுவேன் என்றும் கூறி மிரட்டி வந்தார் என்றும் குடும்பத்தினருடன் காரில் சென்ற போது என் தங்கையின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு சித்ராவை போல் நடந்துவிடும் என்றும் தன் முதல் கணவருடன் சேர்ந்து சதி செய்வதாகவும் நவீன் குமார் மீது புகாரளித்துள்ளார். புகாரளத்த காவல் துறையினரும் தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார் நடிகை ஜெனிஃபர்.