திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தையில்லை! பிக்பாஸ் சென்றாயன் மனைவியின் உருக்கமான வீடியோ..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சக்ஷஸ், அச்சச்சோ, சிலம்பாட்டம், ஆடுகளம், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சென்றாயன். இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார் சென்றாயன்.
பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு 84 நாட்கள் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சிக்கு முன் மனைவி கர்ப்பமானதை கூறாமல் இருந்து மனைவியை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்து அந்த செய்தியை கூறியிருந்தார். அப்போது சென்றாயன் மகிழ்ச்சியடைந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் ஜூலியுடன் ஜோடிபோட்டு நடனமாடிவருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு அவரது மனைவியும் இரு குழந்தைகளையும் மேடையில் நிற்கவைத்து பேசவைத்துள்ளனர். அதில், நான் மிகவும் சாதித்துவிட்டேன், இரண்டாம் குழந்தைக்கும் அப்பாவாகிட்டேன்.
மேலும், அவரது மனைவி கயல்விழி, கல்யாணம் பண்ணி குழந்தையில்லனா எவ்வளவு வலி இருக்குமென்ற வலி எங்களுத்தான் தெரியும் என்று கூறி அழுதுள்ளார். கண்டிப்பாக எல்லோருக்கும் குழந்தை பிறக்கும், யாரையும் அப்படி கேட்காதீங்க என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.