விவாகரத்துக்கு பின் தொகுப்பாளருடன் காதல்!! வதந்திக்கு புற்றுப்புள்ளி வைத்த சீரியல் நடிகை..
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த ஆண்டு முதல் இன்று வரை ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிபிரியா இசை.
நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹரிபிரியா கனா காணும் காலங்கள், லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை 2012ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
20 வயதில் காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஹரிபிரியா, விக்னேஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகர்த்து செய்து பிரிந்துவிட்டார்.
அதன்பின் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஹரிபிரியா, சன் டிவி தொகுப்பாளர் அசாருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருவருக்கும் ரகசிய காதல் என்ற செய்தி வெளியாகியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹரிபிரியா, அவர் என்னுடைய பாய்பிரண்ட் கிடையாது, காதலரும் கிடையாது. என் வாழ்க்கை துணையும் கிடையாது.
ஒருவருடன் மகிழ்ச்சியாக பேசுவது என்னுடைய பிறப்புரிமை, என்னுடைய தப்பு எதுவும் இல்லை. அதை பார்ப்பவர்களிடம் இருக்கிறது தவறு. நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என்றூ பதிலடி கொடுத்துள்ளார் ஹரிபிரியா.