5 பேர் முன்னாடி டிரஸ் மாத்தும் போதும்.. ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் சன் குடும்ப விருதுகள், தென்னிந்திய இண்டர்நேஷ்னல் விருதுகள், விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி நக்ஷத்ரா நாகேஷ். குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த நக்ஷத்ரா, ஒருசில படங்களிலும் நடித்து வந்தார்.
லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்த போது 2001 ல் ராகவ் என்பவரை திருமணம் செய்து தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு கசப்பான அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.
ஷூட்டிங் ஒன்றில் ஆடை மற்றக்கூடிய சமயத்தில் என்னை வேனில் சென்று ஆடையை மாற்றச் சொன்னார்கள். வேனில் ஜன்னல்கள் இல்லை, வெறும் கண்ணாடிகள் மட்டுமே தான் இருந்தது.
வெளியில் 5 பேர் அமர்ந்திருந்தார்கள். நான் ஆடை மாற்றப்போகிறேன் என்று தெரிந்தும் அங்கு நகர்ந்து செல்லாமல் அங்கேயே இருந்தார்கள் என்றும் வேறு வழியில்லாமல் என்னால் எந்த அளவு மறைந்து ஆடையை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு நான் மாற்ற முயற்சி செய்தேன்.
ஆனால் என்னால் அந்த சூழ்நிலையில் என்னை மறைக்க என்னால் முடியவில்லை என வருத்தோடு தெரிவித்தார் நக்ஷத்ரா நாகேஷ்.