படவாய்ப்பில்லாமல் கடைசியில் பிக்பாஸ் பக்கம் சென்ற சீரியல் நடிகை! அதுக்கு பஞ்சமிருக்காது!

biggboss serial tamilactress pavanireddy
By Edward Sep 01, 2021 06:05 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிகப்பெரியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது கொரோனா காலம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க காலதாமதமடைந்து வந்தது. இந்நிலையில் சுமுகமான நிலை உருவாகி வரும் நேரத்தில் கமல் ஹாசன் பிக்பாஸ் 5 சீசனுக்கான பிரமோ புகைப்படம் வைரலானது. நேற்று பிக்பாஸ் 5ன் லோகோ அறிமுகப்படுத்தினார் கமல்.

வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தநிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்று ரசிகர்களின் கேள்விகளாகவே இருந்து வருகிறது. ஷகிலாவின் மகள் நிலா, ரக்ஷிதா, இர்ஃபான், கனி திரு உள்ளிட்ட பலரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை பவானிரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சின்னத்தம்பி சீரியலில் நடித்து பிரபலமான பவானி தற்போது சீரியல் வாய்ப்பில்லாமல் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பவானி ஒரே ஆண்டுகள் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன கஷ்டத்தில் இருந்து மீண்டு தற்போது பிக்பாஸ் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.