விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சின்ன மருமகள் சீரியல் நடிகை!! கணவர் வெளியிட்ட அறிக்கை..
ஸ்வேதா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். சீரியல்களை தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள நினைப்பார்கள்.

அந்தவகையில் சமீபகாலமாக விவாகரத்து செய்யும் வழக்கம் தமிழ் சினிமாவிலும் அதிகரித்து வருகிறது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்று வரும் சின்ன மருமகள் சீரியலின் கதாநாயகி நடிகை ஸ்வேதா பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது.
விவாகரத்து நோட்டீஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன், பிரபல சேனலுக்கு ஸ்வேதா காதலர் என கூறி ஆதி என்பவர் பேட்டிக்கொடுத்தார். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆதி, நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக்வும் நான் யார் என்றே தெரியாது என்று சொன்னவர், தற்போது எதற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் தன்னுடைய கேள்விகளை இன்ஸ்டாகிராமில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.