சாமுண்டீஸ்வரி மீது விழும் கடத்தல் பழி.. காப்பாற்ற களம் இறங்கும் கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் மாயா கார்த்தியிடம் சிக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மகேஷ், மாயா மீது கார்த்திக்கு சந்தேகம் இருந்த நிலையில் அதை வெளிகாட்டுக் கொள்ளாமல் அவர்களை விட்டு விடுகிறான். அதன் பிறகு இன்று சிவனாண்டி ஒரு ரேஷன் கடைக்காரனை சந்தித்து சாமுண்டீஸ்வரி மீதி இருக்கும் பழியை தீர்த்துக் கொள்ள ஒரு திட்டத்தை சொல்கிறான். அதாவது ரேஷன் அரிசி தாண்டீஸ்வரி வீட்டில் வைத்து சாமுண்டீஸ்வரி ரேஷன் அரிசி கடத்துவதாக பொய் புகார் ஒன்றை கிளப்பி விடுகின்றனர்.

இதனால் ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சாமுண்டீஸ்வரி வீட்டில் சோதனையிட்டு அவரை கைது செய்ய முடிவெடுக்கின்றனர். இந்த சமயத்தில் அங்கு வந்த கார்த்தி உண்மையை கண்டுபிடிக்க 1/2 மணி நேரம் கால அவகாசம் கேட்டு ரேஷன் கடைக்காரனை சந்திக்கிறான்.
ரேஷன் கடைக்காரன் சந்தித்து பொருட்களை கடத்த சொன்னது யார்? ரேஷன் பொருட்கள் சாமுண்டீஸ்வரி வீட்டில் வந்தது எப்படி என விசாரணை நடத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.