உயிருக்கு உயிராய் காதலித்த நபர்!! உண்மை தெரிந்து தலையை காட்டாத நடிகை கனகா..
90 களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருந்தவர் தான் நடிகை கனகா. இவர் தமிழ் படங்களை தாண்டி பல்வேறு மொழி படங்களை நடித்துள்ளார். பல படங்களில் பிஸி நடித்து வந்த இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
சமீபத்தில் கனகா எனக்கு 50 வயது ஆகிவிட்டது சினிமாவில் நடிக்க விரும்பினாலும் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் கனகா பற்றி சில விசயங்களை செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.
அதில் கனகாவின் அம்மாவால் வாய்ப்பு பெற்ற ராமசந்திரன் என்பவர் தான் கனகாவின் அனைத்து விசயங்களையும் பார்த்து வந்திருக்கிறார். அப்படி கனகாவை ரகசியமாக ஒருதலையாக காதலித்திருக்கிறார் ராமசந்திரன்.
இதனை கனகா தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு அவரை விரட்டி அடித்துள்ளார். இதன்பின் ராமசந்திரனின் காதலி பல வருடம் கழித்து புரிந்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த கனகா வெளியில் தலைக்காட்டாமல் வீட்டில் படுத்த படிக்கையில் வாழ்ந்து வருகிறார்.
வீடு தீப்பற்றி எரிந்தபோதும் கூட கனகா வீட்டைவிட்டு வெளியே வராதது திரையுலகத்தினரை அதிர்ச்சியளித்ததாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.