ஷாருக்கானின் ரூ. 4 கோடி வேனிட்டி வேன்!! உள்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

Shah Rukh Khan Deepika Padukone Actress
By Edward Dec 23, 2025 07:15 AM GMT
Report

டிசைனர் வினிதா சைதன்யா

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகர்கள் தங்களின் வசதிக்கேற்ப வேனிட்டி வேன்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் நடிகர் நடிகைகளின் வேனிட்டி வேன்களை பிரத்யேகமாக வடிவமைப்பதாக இன்டீரியர் டிசைனர் வினிதா சைதன்யா கூறியிருக்கிறார்.

ஷாருக்கானின் ரூ. 4 கோடி வேனிட்டி வேன்!! உள்ளே எப்படி இருக்கும் தெரியுமா? | Shah Rukh Khan Van Has A Gym Interior Designer

பாலிவுட் நடிகர்கள் தஙகள் வேனிட்டி வேன்களை சிறப்பாக கவனித்துக்கொள்கிறார்கள். நடிகர்கள் தங்கள் வேன்களை சிறந்த இன்டீரியர் டிசைனர்களை கொண்டு வடிவமைக்கிறார்கள். தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார் டிசைனர் வினிதா சைதன்யா.

நான் தீபிகாவின் வீட்டை பலமுறை வடிவமைத்துள்ளேன், பியூமொண்டிலுள்ள அவரது முதல் அபார்ட்மெண்ட், மேலே இருக்கும் அவரது அலுவலகம் வரை மற்றும் அவரது வேனையும் வடிவமைத்தேன்.

உண்மையில் அவரிடம் இரண்டு வேன்கள் இருக்கிறது. டிசைனர் வேனை விரும்பிய முதல் பிரபலங்களில் தீபிகாவும் ஒருவர். அவர் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, அதை ஒரு குறிப்பிட்ட வழியில் விரும்புவார்.

ஷாருக்கானின் ரூ. 4 கோடி வேனிட்டி வேன்!! உள்ளே எப்படி இருக்கும் தெரியுமா? | Shah Rukh Khan Van Has A Gym Interior Designer

அது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களுடன் வேனில் வேலை செய்ய நான் முற்றிலும் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டியிருந்ததே தவிர, இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக நடிகர்கள் உண்மையில் தங்கள் வேனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கற்றுக்கொள்வது.

ஒரு பெரிய வேன் மற்றும் ஒரு சிறிய வேன் அவரிடம் இருக்கிறது. சிறிய வேன் குறுகிய தூர பயணங்களுக்காகவும் பெரிய வேன் பெரிய ஸ்டுடியோ செட்கள் பயன்படுத்தப்படுகிறது. அவரின் இரண்டாவது வேனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, அவர்கள் இருவரும் ஒன்றாக இரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது நான் முதல்முறையாக ஷாருக்கான் வேனுக்குள் சென்றேன்.

தீபிகாவின் சில தேவைகள் பிரத்யேகமாக இருந்தது. ஷாருக்கானின் வேன் வசதி மற்றும் செளகரியத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வேன் பிரமாண்டமாக இருந்தது, அதில் ஒரு சிறிய ஜிம்மும் இருந்தது, அவர் மிகவும் கூலான மனிதர் என்றும் வினிதா சைதன்யா தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery