6000 கோடி சொத்து இருந்தும் ஒருவேளை மட்டும் சாப்பாடு!! ஷாருக்கானின் மறுப்பக்கம் இதுதான்...

Shah Rukh Khan Actors Bollywood Jawan
By Edward Aug 27, 2024 03:30 PM GMT
Report

ஒருவேளை மட்டும் சாப்பாடு

பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்தும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் ஷாருக்கான்.

பல கோடிக்களுக்கு அதிபதியான ஷாருக்கான் ஒரு படத்திற்கு சுமார் 250 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார். அப்படி கோடியில் புரளும் ஷாருக்கான் ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அளித்த பேட்டியில் இரவு 2 மணிக்குத்தான் வீட்டிற்கு வருவதாகவும் தூங்கச் செல்வதற்கு முன் ஒர்க்கவுட் செய்து காலை 5 மணிக்கு தூங்கச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

6000 கோடி சொத்து இருந்தும் ஒருவேளை மட்டும் சாப்பாடு!! ஷாருக்கானின் மறுப்பக்கம் இதுதான்... | Shah Rukh Khans One Time Meal Details Stuns Fans

மேலும் ஷூட்டிங் இருந்தால் காலை 9 மணி அல்லது 10 மணிக்கு எழுந்து, தினமும் ஒரு வேளை மட்டும் தான் சாப்பிடுவேன். intermittent fasting எல்லாம் இல்லை, அது என் விருப்பம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதை கேள்விப்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள், ஒரேவொரு வேலை சாப்பிட்டால் பசிக்காதா?. அது என்ன விடிய, விடிய விழித்துக் கொண்டிருந்துவிட்டு காலையில் தூங்குவது நடுராத்திரியில் ஒர்க்கவுட், ஊர் உலகம் தூங்கும் போது நீங்கள் வேலை செய்வீர்களா? என்னது கிங் கான் இது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.