நயன்தாராவுடன் காதலா? டென்ஷனான ஷாருக்கான்.. அப்படி என்ன தான் ஆச்சு
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என கொண்டாடப்படும் டாப் நடிகர் ஷாருக்கான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்களில் இவரும் முக்கியமானவர்.
ஏற்கெனவே சில படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் பெற்றிருக்கும் இவர் அட்லீ இயக்கத்தில் ஐவான் என்ற படத்தில் மக்களை வெகுவாக கவர்ந்தார். அட்லீ இயக்கிய முதல் இந்தி படம் இது என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜவான் படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பார். இந்தியில் இவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடித்த முதல் படத்திலே நயன்தாரா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
நயன்தாராவுடன் காதலா?
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர், ஜவான் படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் நீங்கள் காதலில் விழுந்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ஷாருக்கான் 'ஷட் அப் , நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாய்..ஹா ஹா" என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.