லியோவில் திரிஷா - விஜய் லிப்லாக் அடிக்கவில்லையா!! அந்தமாதிரி நான் நடிக்கவே இல்லை.. ஷகீலா ஓப்பன் டாக்..

Vijay Trisha Shakeela Gossip Today Leo
By Jai Sep 16, 2024 03:30 PM GMT
Report

சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை மூலம் கேரளா சினிமாத்துறையில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.

லியோவில் திரிஷா - விஜய் லிப்லாக் அடிக்கவில்லையா!! அந்தமாதிரி நான் நடிக்கவே இல்லை.. ஷகீலா ஓப்பன் டாக்.. | Shakeela Teases Vijay Trisha Doing Lip Lock In Leo

ஹேமா கமிட்டி குறித்து நடிகை ஷகீலா பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தொகுப்பாளர் முக்தார் அவருக்கு அளித்த பேட்டியில் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஷகீலா பதிலளித்துள்ளார்.

நான் ஆபாச படத்தில் நடித்தாலும் ஆபாசக் காட்சியில் ஒரு படத்தில் கூட நடிக்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், ஹீரோயின்கள் பிகினி ஆடைகளில் எல்லாம் படுமோசமாக வருவதுபோன்று கூட நான் உடையணிந்தது இல்லை என்றும் பாவாடை துண்டுக் கட்டிக் கொண்டுதான் குளிக்கும் காட்சிகளில் மட்டும் நடித்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

லியோவில் திரிஷா - விஜய் லிப்லாக் அடிக்கவில்லையா!! அந்தமாதிரி நான் நடிக்கவே இல்லை.. ஷகீலா ஓப்பன் டாக்.. | Shakeela Teases Vijay Trisha Doing Lip Lock In Leo

இதனையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் திரிஷா விஜய்க்கு கொடுத்த லிப் லாக் எல்லாம் நடிக்கவில்லையா? அதுபோலத்தான் நான் நடித்ததும். நானும் சினிமா நடிகைதான். ஆபாசப்பட நடிகை இல்லை.

குடும்ப வறுமைக்காக சினிமாவில் ஆபாச படங்களில் நடிக்க வேண்டிய நிலை, உங்களை போன்ற அறிவுரை கூறி நடத்த ஒரு அண்ணனும் இல்லை.

15 வயசுல இதெல்லாம் தப்பு எனக்கு அப்போது தெரியவில்லை, மனதளவில் கஷ்டபட்டதால் ஒரு கட்டத்திற்கு மேல் நிர்வாணக்காட்சிகள் இடம்பெறும் அந்த படங்களில் நடிக்கப் போவதில்லை என்று விலகிவிட்டதாகவும் ஷகீலா தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப்பட்டு உழைக்க எத்தனையோ தொழில்கள் இருந்தும் இந்த தொழிலை ஏன் தேர்வு செய்தீர்கள் என்ற முக்தாரின் கேள்விக்கு தன் கஷ்டத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை ஷகீலா.