தன் மகனுக்காக ஷாலினி அஜித் குமார் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்

Ajith Kumar Shalini Football Tamil Actors
By Bhavya Oct 06, 2024 03:30 PM GMT
Bhavya

Bhavya

Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இவர் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தன் மகனுக்காக ஷாலினி அஜித் குமார் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம் | Shalini And Her Son Photos Went Viral

இதில், மகள் அனோஷ்கா அஜித்குமாரைப் போல் இருப்பதாகவும், மகன் ஆத்விக் ஷாலினியைப் போல் இருப்பதாகவும் பலர் கூறுவதுண்டு.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றை தனது தாய் ஷாலினியுடன் இணைந்து கண்டுகளித்துள்ளார் ஆத்விக்.

தன் மகனுக்காக ஷாலினி அஜித் குமார் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம் | Shalini And Her Son Photos Went Viral

இவருக்கு சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார்.

வைரலாகும் புகைப்படம் 

அவ்வப்போது, இவர் கால்பந்து விளையாடும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகும். அதன் படி, தன் அம்மாவுடன் அவர் கால்பந்து போட்டியை கண்டுகளிக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

தன் மகனுக்காக ஷாலினி அஜித் குமார் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம் | Shalini And Her Son Photos Went Viral