இந்த நடிகையும் வேண்டும்! அந்த நடிகருக்காக இயக்குநர் சங்கர் எடுத்த அதிரடி முடிவு..

shankar anjali ramcharan tamilactress RC15
By Edward Aug 12, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் பெற்றவர் இயக்குநர் சங்கர். அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0, நண்பன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தொடர்ந்து, இந்தியன் 2 படத்தில் ரஜினியுடன் இணைந்து சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணை வைத்து இயக்கவிருக்கிறார். அப்படத்தின் கதாநாயகி யார் என்று தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் சங்கருடன் நடித்தது பற்றியும் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை அஞ்சலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது. சமீபத்தில் அஞ்சலி வெப் சீரிஸ் ஒன்றில் க்ளாமரில் எல்லைமீறி நடித்தது அதிர்ச்சிய ஏற்படுத்தி வைரலானார்.